கர்னல் ஜான் பென்னிக்குக் பிறந்த நாள் கொண்டாட்டம்.

மதுரை உசிலம்பட்டியில் ஜான் பென்னிக்குக் பிறந்த நாள் விழா பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை வளாகத்தில் இன்று ( ஜன.12) கர்னல் ஜான் பென்னிக்குக் பிறந்த நாளை முன்னிட்டு உசிலம்பட்டி 58 கால்வாய் சங்க விவசாயிகள், ஜெயராஜ், சிவப்பிரகாசம், செந்தில்குமார் தலைமையில் பென்னிக்குக் பொங்கல் வைத்து விழா எடுத்து கொண்டாடினர். இவ்விழாவில் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த திமுக நகரச் செயலாளர் எஸ் ஓ ஆர் தங்கபாண்டியன் தலைமையிலான நிர்வாகிகள் , அதிமுக பூமா ராஜா தலைமையிலான நிர்வாகிகள், அகில இந்திய பார்வட் ப்ளாக் கட்சியின் கதிரவன், பாரதிய பார்வர்ட் பிளாக் முருகன் ஜி, மற்றும் இடதுசாரி கட்சிகளை சேர்ந்த மக்கள் அதிகாரம் குருசாமி உள்ளிட்ட நிர்வாகிகளும், பி கே எம் அறக்கட்டளை நிர்வாகிகளும் கலந்து கொண்டு உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர், பி.கே.மூக்கையாத் தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து பின் ஜான் பென்னிக்குக் திருவுருவ படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினார்கள்.
Next Story