திமுக வழக்கறிஞர்கள் ஆலோசனை கூட்டம்
Dharmapuri King 24x7 |12 Jan 2025 10:27 AM GMT
காரிமங்கலத்தில் முன்னாள் அமைச்சர் தலைமையில் திமுக வழக்கறிஞர் ஆலோசனைக் கூட்டம்
தர்மபுரி திமுக மேற்கு மாவட்ட வழக்கறிஞர்கள் ஆலோசனைக் கூட்டம், காரிமங்கலம் மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று நடந்தது.இதில்மாவட்ட அமைப்பாளர் மூத்த வழக்கறிஞர் சந்திர சேகர் தலைமை வகித்தார். மாவட்ட அவை தலைவர் மனோகரன், மாவட்ட அரசு வழக்கறிஞர் பிகே முருகன், வக்கீல் கோபால் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலை வர் முனிராஜ் வரவேற்றார். மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன், சட்டத்துறை மாநில இணை செயலாளர் முன்னாள் எம்பி தாமரைச் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். துணைத் தலைவர் சக்திவேல் தீர்மானங்களை வாசித்தார். மேலும் சென்னையில் வரும் 18ம் தேதி நடைபெறும் திமுக வழக்கறிஞர் அணி மாநில மாநாட்டில், வழக்கறிஞர்கள் அனைவரும் கலந்து கொள்வது தொடர்ந்து வழக்கறிஞர்கள் சேம நல நிதிக்காக மாவட்ட செயலாளர் பழனியப்பன் 5 லட்ச ரூபாய்க்கான காசோலையை தாமரைச் செல்வனிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், துணை அமைப்பாளர்கள் ரவீந்திரன். தர்மன். இளங்கோ. அரசு வழக்கறிஞர்கள் நஞ் சுண்டன், இளவரசன், சரவ ணன், சக்திவேல், சேகர், சரவணன், மூத்த வழக்கறிஞர் வீராசாமி. முருகேசன், சதாசிவம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story