கோடங்கிபட்டி- வண்ண வண்ண உடை அணிந்து வட்டமிட்டு கும்மியடித்து பொங்கலை கொண்டாடிய கல்லூரி மாணவிகள்.
Karur King 24x7 |12 Jan 2025 10:44 AM GMT
கோடங்கிபட்டி- வண்ண வண்ண உடை அணிந்து வட்டமிட்டு கும்மியடித்து பொங்கலை கொண்டாடிய கல்லூரி மாணவிகள்.
கோடங்கிபட்டி- வண்ண வண்ண உடை அணிந்து வட்டமிட்டு கும்மியடித்து பொங்கலை கொண்டாடிய கல்லூரி மாணவிகள். கரூர் அடுத்த கோடங்கிபட்டி பகுதியில் செயல்படும் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாணவிகள் பாரம்பரிய வண்ண வண்ண உடைகள் அணிந்து கல்லூரி வளாகம் முழுவதும் பட்டாம்பூச்சிகளாக வலம் வந்தனர். கல்லூரி வளாகத்தில் சூரிய பகவானுக்கு படையல் இடப்பட்ட பொங்கல் பொங்கி வந்தவுடன் பொங்கலோ பொங்கல் என கூவி மகிழ்ந்தனர். படையலிடப்பட்ட பொங்கலை அனைவருக்கும் வழங்கி பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து கல்லூரி மாணவிகள் தமிழ் திரைப்பட பாடல்கள் பக்தி பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்களுக்கு ஏற்றவாறு பல்வேறு அபிநயங்களை அமைத்து நடனமாடி, கும்மாளமிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இதனால் கல்லூரி வளாகம் முழுவதும் பொங்கல் விழா களைகட்டி இருந்தது காண்போரை கவர்ந்தது.
Next Story