ராசிபுரத்தில் முருகன் வள்ளி தெய்வானை திருவீதி உலா: பழனி யாத்திரை குழுவினர் ஊர்வலம்..

ராசிபுரத்தில் முருகன் வள்ளி தெய்வானை திருவீதி உலா:  பழனி யாத்திரை குழுவினர் ஊர்வலம்..
ராசிபுரத்தில் முருகன் வள்ளி தெய்வானை திருவீதி உலா: பழனி யாத்திரை குழுவினர் ஊர்வலம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழனி முருகன் கோவில் பாதயாத்திரை முன்னிட்டு பக்தர்கள் ஊர்வலம் நடந்தது. பொங்கல் நாளில் ராசிபுரம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த முருகன் பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி செல்வது வழக்கம். ராசிபுரம் வி.நகர் ஓம் பழனி பாதயாத்திரை மற்றும் அன்னதான குழுவினர், 21ம் ஆண்டாக பழனி மலைக்கு யாத்திரை செல்கின்றனர். தைமாதம், 1ம் தேதி பழனி நடைபயணம் தொடங்க உள்ளனர். இதையொட்டி, வி.நகர் சித்தி விநாயகர் கோவிலில் அமைந்துள்ள பாலமுருகன் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் ஆராதனை நடந்தது. அன்னதானும் மாலை முருகன் வள்ளி தெய்வானை, விநாயகர், ஐயப்பன் சுவாமியை அலங்கரித்து ஊர்வலமாக சென்றனர். வி.நகரில் இருந்து தொடங்கி பட்டணம் சாலை, புதுப்பாளையம் ரோடு, சேலம் சாலை, கடைவீதி வழியாக மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. இதில் மேளதாளத்துடன் கைலாய வாத்தியங்கள் முழங்க ஏராளமான பக்தர்கள் காவடி மற்றும் வேல் எடுத்து நடனமாடிக் கொண்டே ஊர்வலமாக சென்றனர். பின்னர் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாதாரணை செய்யப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story