அரூர் வட்டாரத்தில் நெல் நடவு பணிகள் தீவிரம்
Dharmapuri King 24x7 |12 Jan 2025 11:07 AM GMT
அரூர் தொகுதிக்குட்பட்ட மொரப்பூர் மற்றும் அதன் வட்டாரங்களில் மண்ணின் ஈரப்பதம் அதிகரித்ததின் காரணமாக விவசாயிகள் நெல் நாற்று நடவு பணியில் தீவிரம்
தர்மபுரி மாவட்டத்தில், கடந்த மாதம் பரவலாக மழை பெய்தது. இதனால், பெரும்பாலான ஏரி, குளம்,கிணறுகள் நிரம்பியது. இதனையடுத்து அனைத்து பகுதிகளிலும் நெல் நடவு பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மொரப்பூர், கம்பைநல்லூர் பகுதியில் ஈச்சம்பாடி அணைக்கட்டு நிரம்பி வழிவதால், இப் பகுதியில் அதிக அளவில் நெல் நடவு செய்யப்பட்டு வருகிறது. மண்ணின் ஈரப்பதம் அதிகரித்ததன் காரணமாக,அரூர் பகுதியில் நெல் நடவு பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். தற்போது நாற்று விட்டு வயலில் நடவு பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story