பிளக்ஸ் பேனரை அகற்ற முயன்ற காவல்துறை கிராம மக்கள் சாலை மறியல்
Sankarankoil King 24x7 |12 Jan 2025 11:34 AM GMT
கிராம பொதுமக்கள் சாலை மறியல்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கழுகுமலை சாலையில் உள்ள அழகனேரி கிராமத்தில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை சார்ந்தவர்கள் பிளஸ் பேனரை போலீசார் அகற்ற முயன்றனர். இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சங்கரன்கோவில் டிஎஸ்பி அறிவழகன் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிளக்ஸ் பேனரை வைத்துக் கொள்ளலாம் என தெரிவித்தனர். இதில் காவல்துறை பேச்சுவார்த்தை பின்பு சாலை மறியல் கைவிட்ட பொதுமக்கள் இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story