போலீசார் மீது மோதும் மகேந்திரா பிக்கப் வாகனம்
Dindigul King 24x7 |12 Jan 2025 11:39 AM GMT
சின்னாளப்பட்டி அருகே பெருமாள் கோவில்பட்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது மோதும் மகேந்திரா பிக்கப் வாகனம் பரபரப்பான சிசிடிவி காட்சி வெளியீடு
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி காவல் நிலையத்தை சேர்ந்த எஸ்ஐ சேகர் மணிகண்டன் மற்றும் சதீஷ் குமார் ஆகிய போலீசார்ம் இரண்டு பட்டியல் போலீசாரும் பெருமாள் கோவில்பட்டியில் தங்களது இருசக்கர வாகனத்தை தெருவில் நிறுத்தி வைத்துவிட்டு போலீசார் நின்று கொண்டிருக்கும் போது அந்த வழியாக வந்த மகேந்திரா பிக்கப் வாகனம் ஒன்று அதி பயங்கரமாக வந்து போலீசார் வாகனத்தின் மீதும் போலீசார் மீதும் பயங்கரமாக மோதியது இதில் போலீசாரின் மூன்று இரு சக்கர வாகனங்கள் கடுமையாக சேதம் அடைந்தது. போலீசாரும் காயமடைந்தனர். இதனை அடுத்து மகேந்திரா பிக்கப் வாகனம் அருகில் இருந்த சுவற்றில் மோதி நின்றது பின்னர் சுதாரித்து கொண்ட போலீசார் மகேந்திரா பிக்கப் வாகணத்தை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து சின்னாளப்பட்டி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர். போலீசார் மீது மகேந்திரா பிக்கப் வாகனம் மோதும் பரபரப்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் விபத்தா அல்லது போலீசாரை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டனரா என்ற கோணத்தில் சின்னாளப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மகேந்திரா பிக்கப் வாகனத்தை ஓட்டி வந்த பெருமாள் கோவில்பட்டியைச் சேர்ந்த மருதமுத்து என்பவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
Next Story