மாவட்ட அளவிலான சதுரங்க சாம்பியன்ஸ் போட்டி

மாவட்ட அளவிலான சதுரங்க சாம்பியன்ஸ் போட்டி
திண்டுக்கல் ஆர்.வி.எஸ் திருமண மண்டபத்தில் மாவட்ட அளவிலான சதுரங்க சாம்பியன்ஸ் போட்டிகள் நடைபெற்றது
திண்டுக்கல் ஆர்.வி.எஸ் திருமண மண்டபத்தில் வி ஆர் 3 கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை, ஆனந்த் செஸ் அகாடமி, மற்றும் ஆர்விஎஸ் கல்வி குழுமம் சார்பில் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் சதுரங்க போட்டிகள் ஒருங்கிணைப்பாளர் ஜெகன்மோகன் தலைமையில் நடைபெற்றது. போட்டிகள் நாக்அவுட் முறையில் நடைபெற்றன. ஒன்பது வயதுக்கு கீழ் 12 வயதுக்கு கீழ் 15 வயதுக்கு கீழ் என ஆண் பெண் பிரிவுகளில் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் முதலிடம் பிடித்து சாம்பியன்ஷிப் பட்டம் கோப்பை சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசாக ரூபாய் 3000 வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசாக ரூபாய் 2000ம் மூன்றாம் பரிசாக ரூபாய் 1500 நான்காம் முதல் ஆறாம் இடம் பிடித்தவர்களுக்கு ரூபாய் 1000 07 முதல் 10-ஆம் இடம் பிடித்தவர்களுக்கு ரூபாய் 750, 11 லிருந்து 15ஆம் இடம் பிடித்தவர்களுக்கு ரூபாய் 500 பரிசுகளாக வழங்கப்பட்டன. திண்டுக்கல், பழனி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், வடமதுரை, நத்தம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் இருந்து 250க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொண்டனர். ஆனந்த் செஸ் அகாடமி நிர்வாக இயக்குனர் ரமேஷ் குமார், தேசிய நடுவர் கருணாகரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கினர்.
Next Story