திருச்சுழி பகுதிகளில் முடிவடைந்த வளர்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.*

திருச்சுழி பகுதிகளில் முடிவடைந்த வளர்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.*
திருச்சுழி பகுதிகளில் முடிவடைந்த வளர்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிலுக்கபட்டி கிராமத்தில் ரூ.11.97 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், புரசலூர் கிராமத்தில் ரூ.7.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட கலையரங்கம், பூலாங்கால் வடக்குப்பட்டி கிராமத்தில் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட சமுதாயக் கூடம், திருமலைபுரம் கிராமத்தில் ரூ.11.56 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தினை தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். தொடர்ந்து, திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் மண்டபசாலை ஊராட்சிக்கு உட்பட்ட ம.ரெட்டியாபட்டியில், ரூ.54.75 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள புதிய ஆரம்பச் சுகாதார நிலையம், இறைசின்னம்பட்டி கிராமத்தில் ரூ.9.77 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நியாயவிலைக்கடை கட்டடத்தை திறந்து வைத்த அமைச்சர் தங்கம் தென்னரசு பொதுமக்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கினார். மேலும், தமிழ்பாடி ஊராட்சியில் ரூ. 14 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நியாயவிலைக்கடை கட்டடத்தை திறந்து வைத்த அமைச்சர் பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கி, தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக் கூறினார்.
Next Story