நீலாம்பூர்: பொங்கல் விழா குதூகல கொண்டாட்டம் !
Coimbatore King 24x7 |12 Jan 2025 1:42 PM GMT
கல்லூரி மாணவர்கள் 108 பொங்கல் வைத்து குதூகலமாக பொங்கல் கொண்டாடினர்.
நீலாம்பூர் பகுதியிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா களைகட்டியது. கல்லூரி மாணவர்கள் ஒன்று சேர்ந்து 108 பொங்கல் வைத்து பாரம்பரியத்தை போற்றினர். பிரான்சைச் சேர்ந்த லெசி என்ற மாணவி, சேலை அணிந்து தமிழர் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.உறியடித்தல், கயிறு இழுத்தல் போன்ற விளையாட்டுகள் நடைபெற்ற நிலையில், பள்ளி மாணவர்களின் துடும்பு இசைக்கு ஆடிய ஆட்டம் கல்லூரி மாணவர்களையும் கவர்ந்தது. இதில், எதிர்பாராதவிதமாக ஒரு மாணவி அருள் வந்து ஆடத் தொடங்கியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.இது குறித்து பேசிய பிரான்சிய மாணவி லெசி, இந்த விழாவில் பங்கேற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும்,முதல் முறையாக சேலை அணிந்து இந்த பாரம்பரிய விழாவில் பங்கேற்றது புதுமையான அனுபவம் என்றும் இந்த விழா தமிழர் பாரம்பரியத்தின் பெருமையை எடுத்துரைக்கிறது என தெரிவித்தார்.இந்த பொங்கல் விழாவில் கல்லூரி நிறுவனத்தின் தலைவர் இ. எஸ். கதிர், திருமதி லாவண்யா கதிர் மற்றும் தலைவர் மிதிலேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story