அறிஞர் அண்ணா பிறந்த தினத்தினை முன்னிட்டு பொது மக்களிடையே உடற்தகுதி கலாச்சாரம் புகுத்தும் வண்ணம் அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப் போட்டி நடைபெற்றது

விருதுநகர் மாவட்டம் அறிஞர் அண்ணா பிறந்த தினத்தினை முன்னிட்டு பொது மக்களிடையே உடற்தகுதி கலாச்சாரம் புகுத்தும் வண்ணம் அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப் போட்டி நடைபெற்றது
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், விருதுநகர் மாவட்ட மேம்பாட்டுப் பிரிவு சார்பாக அறிஞர் அண்ணா பிறந்த தினத்தினை முன்னிட்டு பொது மக்களிடையே உடற்தகுதி கலாச்சாரம் புகுத்தும் வண்ணம் அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப் போட்டி இன்று நடைபெற்றது. இந்த மராத்தான் போட்டியானது காலை 6.30 மணியளவில் விருதுநகர் மாவட்ட மருத்துவகல்லூரி வளாகத்தில் உள்ள நுழைவுவாயில் இருந்து ஆரம்பித்து சூலக்கரை மேடு வரை சென்று மருத்துவ கல்லூரி வளாகத்தில் நிறைவு பெற்றது. தலைமை அலுவலகத்தின் முலம் வழங்கப்பட்ட பரிசு தொகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் உயர்த்தி முதல் பரிசு ரூபாய்.5000/- இரண்டாம் பரிசு ரூபாய்.3000ஃ- மூன்றாம் பரிசு ரூ.2000/- நான்காம் இடம் முதல் பத்தாம் இடம் வரை ரூபாய்.1000/- என வழங்கப்பட்டுள்ளது. போட்டிகள் 17 வயது முதல் 25 வரை ஒரு பிரிவு மற்றும் 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஒரு பிரிவு என இருபாலருக்கு நடத்தப்பட்டது, இதில் கலந்து கொண்டவர் விபரம் 17 வயது முதல் 25 வயது பிரிவில் 75 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் என மொத்தம் 83 நபர்கள் பங்கு பெற்றனர். 25 வயது மேற்பட்டவர் பிரிவில் 37 ஆண்கள் மற்றும் 08 பெண்கள் மொத்தம் 45 நபர்கள் என மொத்தம் 112 ஆண்கள் மற்றும் 16 பெண்கள் கலந்து கொண்டனர். முதல் 10 இடங்கள் பிடித்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு தொகை வங்கி கணக்கில் செலுத்தப்பட வங்கி கணக்கு புத்தகநகல் பெறப்பட்டு வங்கி கணக்கில் செலுத்தப்படஉள்ளது.மேலும் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
Next Story