சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கலந்துகொண்டார். -

சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில்   மாவட்ட ஆட்சித்தலைவர்  ஜெயசீலன்  கலந்துகொண்டார். -
விருதுநகர் மாவட்டம் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கலந்துகொண்டார். -
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், எஸ்.கொடிக்குளம், ஜெயகாந்தன் நகரில் தமிழர் பாரம்பரித்தை உணர்த்தும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை -2025- தினத்தை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கலந்துகொண்டார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: பொது மக்களுடன் இணைந்து பழங்குடியினர் பகுதிகளில் சமத்துவ பொங்கல் கொண்டாடும் இந்த நிகழ்ச்சிக்காக என்னை அழைத்ததற்கு முதலில் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த பகுதிக்கு நான் ஏற்கனவே மூன்று முறை வருகை தந்துள்ளேன் இது நான்காவது முறையா வந்துள்ளேன். முதல் முறை வருகை தந்த போது இங்கே நியாயவிலை கடையில் பொருள் கொண்டு வந்து, வண்டியில் வழங்க கோரிக்கை வைத்தார்கள். உடனடியாக அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. நமது மாவட்டத்தில் இக்கிராமத்தோடு சேர்த்து மூன்று கிராமங்களில் தொலைபேசி சமிக்கை ஒரு மாத காலத்திற்குள் விரைந்து அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொங்கல் திருநாள் என்பது மிக முக்கியமான ஒரு பண்டிகை. தமிழர்களின் பண்பாட்டு மரபில் பொங்கல் பண்டிகை தான் பிற பண்டிகைகளை விட முக்கியமானது. பண்டிகைகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர், ஒரு குறிப்பிட்ட மதத்தினர் கொண்டாடுகிறார்கள். இப்படி மதப் பண்டிகைகள், சமூக பண்டிகைகள் நிறைவாக இருக்க கூடிய நமது பண்பாட்டுச் சூழலில் ஜாதி, மதம் இவற்றை எல்லாவற்றையும் கடந்து அனைவரும் ஒற்றுமையாக ஒரு இனமாக ஒற்றுமையாக கொண்டாடக்கூடிய பண்டிகை என்பது தமிழர்களுக்கு பொங்கல் பண்டிகை தான். அத்தகைய தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை நாம் அனைவரும் இணைந்து கொண்டாடுவது என்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது அதைவிட முக்கியம் இந்த பண்டிகை தான் இயற்கையோடு இணைந்து கொண்டாடுகிறோம். நமக்கு அடிப்படை தேவையாக இருப்பது உணவு. அந்த உணவை வழங்கக்கூடிய விவசாய பெருங்குடி மக்களுடைய உழைப்பை போற்றுவதற்கும், விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய கால்நடைகளின் உழைப்பையும் அந்த உயிரினத்தையும் போற்றுவதற்கும், பசுமையை போற்றுவதற்கும், பல்லுயிர் வகைகள் என்று பேசக்கூடிய மிக முக்கியமான ஒரு பொருளை நாம் நீண்ட காலமாக நம்முடைய பண்பாட்டு மரபில் வைத்திருக்கிறோம். அவற்றை கொண்டாடுவதற்கும், பேசுவதற்கும் மிக முக்கியமான நாள் தான் இந்த தமிழர் திருநாள் தைத்திங்கள் பொங்கல் பண்டிகை. அந்த பொங்கல் பண்டிகையை நமது ஜெயந்தி நகர் பழங்குடியினர் கிராமப் பகுதிகளில் கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் உரியது இங்கே குடியிருக்க கூடிய அனைவருக்கும் தமிழர் திருநாளாம் தைத்திருநாள் பொங்கல் பண்டிகை வாழ்த்துக்களை நான் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன். அடிப்படை வசதிகள் மற்றும் சாலைகள் வசதிகள் மிக விரைந்து செயல்படுத்தப்படும் என்பதையும் உங்களுக்கு தெரிவித்து, குழந்தைகளை நிச்சயமாக நீங்கள் தொடர்ச்சியாக பள்ளிக்கு அனுப்ப வேண்டும்,அதைவிட முக்கியம் ஒரு ஆறாம் வகுப்பு மேல் இருக்கக் கூடிய மாணவ மாணவிகளை குழந்தைகளை எல்லாம் நீங்கள் விடுதியில் சேர்ந்து படிக்க வைப்பதற்குரிய வாய்ப்புகளையும் நீங்கள் அனைவரும் பயன்படுத்த வேண்டும். இங்கே மகளிர் சுய உதவி குழுக்கள் சிறப்பாக செயல்படுகிறது. அனைவரும் சேர்ந்து குழுக்களிலும் இணைந்து புதிய தொழில்களையும் தொடங்கி நீங்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்று இந்த நாளில் வாழ்த்தி உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை பொங்கல் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்;சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்தார்.
Next Story