சூலூர்: இளவட்டக் கல் தூக்கி தைப்பொங்கல் கொண்டாட்டம் !
Coimbatore King 24x7 |12 Jan 2025 2:50 PM GMT
தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, சூலூர் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது.
தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, சூலூர் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.காவலர்கள் புத்தாடை அணிந்து, பொங்கலிட்டு, பாரம்பரிய கும்மியாட்டம் ஆடி மகிழ்ந்தனர்.குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவின் சிறப்பாக, காவலர்கள் தங்கள் மனைவிகள் முன்னிலையில் இளவட்டக் கல்லை தூக்கி வீரம் காட்டியது பார்வையாளர்களை கவர்ந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, மாவட்ட துணை கண்காணிப்பாளர் தங்கரமன் மற்றும் சூலூர் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.துணை ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என பலர் கலந்து கொண்டு, பொங்கல் திருநாளை உற்சாகமாக கொண்டாடினர்.
Next Story