சத்தியில் அதிமுகவினர் ஆலோசனை கூட்டம்
Bhavanisagar King 24x7 |12 Jan 2025 3:22 PM GMT
சத்தியில் அதிமுகவினர் ஆலோசனை கூட்டம்
சத்தியில் அதிமுகவினர் ஆலோசனை கூட்டம் சத்தி நகர கழக அலுவலகத்தில் கழக செயலாளர் முன்னாள் சேர்மன் O.M.சுப்பிரமணியம், தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் நீக்க பட்டவர்களை சரிபார்த்து முறைகேடாக நீக்கி இருந்தால் அவர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது, கழக நிறுவனர் டாக்டர் புரட்சி தலைவர் எம். ஜி .ஆர் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 17.1.2025 சத்தி நகரத்தில் கழக கொடி ஏற்றி இனிப்பு வழங்கி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க தீர்மானிக்க ப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட,நகர கழக பொறுப்பாளர்கள், வார்டு செயலாளர்கள், சார்பு அணி பொறுப்பாளர்கள், நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக தொண்டர்கள் கொண்டனர்.
Next Story