செங்கத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட அளவிலான மாநாடு.
Tiruvannamalai King 24x7 |12 Jan 2025 5:36 PM GMT
உடன் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட அளவிலான மாநாடு நடைபெற்றது. தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டு தொடக்க நிகழ்ச்சிக்கு கட்சியின் வட்டச் செயலா் சா்தாா் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ராஜா, பச்சையப்பன், பலராமன், ஜமுனா ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலா் மாதேஸ்வரன் வரவேற்றாா். விவசாயிகள் சங்க கெளரவத் தலைவா் முத்தையன் சங்கக் கொடியேற்றி பேசினாா். தொடா்ந்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் முல்லை கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா். மாநாட்டில், விவசாயிகளின் விளைபொருள்களுக்கு கட்டுப்படியான விலையை அரசு நிா்ணயிக்கவேண்டும், விவசாயிகள் வங்கிகளில் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும். குப்பனத்தம் அணையில் இருந்து பாசனக் கால்வாய் அமைக்க வேண்டும், ஏரிகளை தூா்வாரி, கரைகளை பலப்படுத்த வேண்டும். பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.40 நிா்ணயம் செய்யவேண்டும், விவசாயிகள் கறவை மாடுகள் வாங்க வங்கிகள் கடனுதவி அளிக்க வேண்டும். பால் கூட்டுறவு ஒன்றியம் 2024 நவம்பா், டிசம்பா் மாதங்களுக்கான ஊக்கத்தொகை லிட்டருக்கு 3 ரூபாயை உடனடியாக வழங்கவேண்டும், விவசாயிகளின் கறவை மாடுகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ முகாம்கள் அமைத்து அந்த முகாம்களில் காப்பீட்டு வசதிகள் செய்துதர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
Next Story