குற்றாலம் சித்திரசபையில் பச்சைசாத்தி தாண்டவதீபாராதனை
Sankarankoil King 24x7 |13 Jan 2025 1:17 AM GMT
சித்திரசபையில் பச்சைசாத்தி தாண்டவதீபாராதனை
தென்காசி மாவட்டம், குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாதசுவாமி கோயிலில் மாா்கழி திருவாதிரைத் திருவிழாவில் சித்திரசபையில் அருள்மிகு நடராஜபெருமானுக்கு பச்சைசாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெற்றது. இத் திருக்கோயிலில் திருவாதிரைத் திருவிழா ஜன. 4ஆம்தேதி காலை 5.20 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் 8ஆம் தேதி 5 தோ்களும் பக்தா்களால் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. சித்திர சபையில் அருள்மிகு நடராஜருக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெற்றது. விழாவில், 10ஆம் நாளான ஜன. 13ஆம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு மேல் சித்திரசபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும், தொடா்ந்து 5 மணிக்கு திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடைபெற்றது . விழா நாள்களில் நாள்தோறும் காலை, இரவில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதலும், காலை 9.30, இரவு 7 மணிக்கு மேல் ஆகிய நேரங்களில் அருள்மிகு நடராஜபெருமானுக்கு தாண்டவ தீபாராதனையும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் உதவிஆணையா் ந.யக்ஞநாராயணன் தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.
Next Story