வெள்ளியணை அருகே டூவீலர்கள் மோதல். ஒருவர் படுகாயம்.
Karur King 24x7 |13 Jan 2025 1:41 AM GMT
வெள்ளியணை அருகே டூவீலர்கள் மோதல். ஒருவர் படுகாயம்.
வெள்ளியணை அருகே டூவீலர்கள் மோதல். ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம், வெள்ளியணை தெற்கு, மாரியம்மன் கோவில் பின்புறம் வசித்து வருபவர் செந்தில்குமார் வயது 38.இவர் மின்வாரியத்தில் கேங் மேனாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஜனவரி 10ஆம் தேதி இரவு 7:45- மணி அளவில், திண்டுக்கல்- கரூர் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் வெள்ளியணை மாரியம்மன் கோவில் பின்புறம் வந்தபோது, அதே சாலையில் அருகில் உள்ள பள்ள சங்கரனூர் பகுதியைச் சேர்ந்த சண்முகம் வயது 40 என்பவர் வேகமாக ஓட்டி வந்த மற்றொரு டூவீலர், செந்தில்குமார் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த செந்தில்குமாரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக டூவீலரை வேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சண்முகம் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.
Next Story