கடத்தூர் வாரச்சந்தையில் வெற்றிலை விற்பனை ஜோர்
Dharmapuri King 24x7 |13 Jan 2025 2:32 AM GMT
கடத்தூர் வெற்றிலை வார சந்தையில் 6.25 லட்சத்திற்கு வெற்றிலைகள் விற்பனை விவசாயிகள் மகிழ்ச்சி
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடத்தூர் பகுதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தோறும் மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற வெற்றிலை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம் இதனலையில் ஜனவரி 12 நேற்று காலை முதல் நடைபெற்ற வெற்றிலை வாரச்சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சேலம் கிருஷ்ணகிரி நாமக்கல் திருவண்ணாமலை திருப்பத்தூர் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வெற்றிலைகளை விற்க மற்றும் வாங்குவதற்காக வந்திருந்தனர் 128 கட்டுகளைக் கொண்டு ஒரு மூட்டை வெற்றிலை நேற்று 11,000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 25,000 ரூபாய் விற்பனையானது. மேலும் நேற்று வழக்கத்தை விட மூட்டைக்கு 4000 ரூபாய் அதிகரித்து வெற்றிலைகள் விற்பனையாகி நேற்று ஒரே நாளில் 6.25 இலட்சத்திற்கு வெற்றிலைகள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story