யானைக்கால் நோய் உபகரணங்கள் வழங்கும் முகாம்
Kallakurichi King 24x7 |13 Jan 2025 4:14 AM GMT
முகாம்
கள்ளக்குறிச்சி அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் யானைக்கால் நோயாளிகளுக்கு நோய் பராமரிப்பு உபகரணங்கள் வழங்கும் முகாம் நடந்தது. நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கீதா தலைமையில் மாவட்ட பூச்சியியல் வல்லுநர் சுப்பிரமணியன் முன்னிலையில் நடந்த முகாமில் நகரப்பகுதி யானைக்கால் நோயாளிகளுக்கு நோய் பராமரிப்பு உபகரணங்களான பிளாஸ்டிக் கூடை, முக்காலி, தண்ணீர் ஜக், சோப்பு டப்பா, சோப்பு, துண்டு அடங்கிய பொருட்கள் வழங்கப்பட்டது.
Next Story