மாவட்ட அளவிலான டேக்வாண்டா சாம்பியன்ஸ் போட்டி
Dindigul King 24x7 |13 Jan 2025 4:25 AM GMT
திண்டுக்கல் SMBM பள்ளியில் மாவட்ட அளவிலான டேக்வாண்டா சாம்பியன்ஸ் போட்டிகள் நடைபெற்றன
திண்டுக்கல் SMBM பள்ளி மீட்டிங் ஹாலில் டேக்வோண்டா பள்ளிகளுக்கு இடையேயான சாம்பியன்ஷிப் போட்டிகள் டேக் வாண்டோ சங்க மாநில தலைவர் கமலஹாசன் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், நத்தம் ,பழனி, வேடசந்தூர், வடமதுரை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இருந்து 368 பேர் போட்டிகளில் பங்கேற்றனர். எடை மற்றும் வயது அடிப்படையில் நாக் அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன. 15 பள்ளிகளில் இருந்து வீரர், வீராங்கனைகள் சப்-ஜுனியர், கேடட், ஜூனியர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு தங்கம் வெள்ளி வெண்கல பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் முதல் மூன்று இடம் பிடித்த வீரர் வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் ஜோதிபாசு, மாவட்டத் தலைவர் சார்வாசன் பிரபு, மாநில துணை செயலாளர் ஷர்மிளா, எஸ் ஏ டி கிளப் தலைவர் வாஞ்சிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்கள். ஒருங்கிணைப்பாளர் நித்யா போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
Next Story