மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி

மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி
திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில் டை பிரேக்கர் முறையில் திண்டுக்கல் கேஎப்சி அணி சாம்பியன்சிப்பட்டத்தை தட்டிச் சென்றது
திண்டுக்கல்லில் மாநில அளவிலான ஐவர் கால்பந்து இறுதிப்போட்டியில் திண்டுக்கல் கேஎஃப்சி அணி வெற்றி பெற்றது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு திண்டுக்கல் கேஎப்சி கால்பந்து கழகம் சார்பில் 13 ஆம் ஆண்டு, மாநில அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டிகள் மலைக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் துவங்கியது. இதில் திண்டுக்கல், மதுரை, தேனி, சென்னை, தூத்துக்குடி, கோயம்புத்தூர் உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 50 அணிகள் கலந்து கொண்டன. இதில் பொது பிரிவில் 40 அணிகளும், 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 10 அணிகளும் பங்கேற்றன. போட்டிகள் நாக்அவுட் முறையில் நடைபெற்றன. மூன்று நாட்கள் பகல், இரவு மின்னொளியில் நடைபெற்றன. போட்டிகளை காண ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். சீனியர் பிரிவில் திண்டுக்கல் கேஎஃப்சி அணியினரும், திண்டுக்கல் பிரபு மெமோரியல் அணியினரும் மோதினர். இதில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டனர். இறுதியில் டைபிரேக்கர் முறையில் இரு அணிகளும் தலா இருகோல் போட்டனர். இதையடுத்து சடன் டெத் முறையில் திண்டுக்கல் கே எப்சி அணியினர் வெற்றி பெற்றனர். 14 வயதுக்கு உட்பட்டியவர்களுக்கான பிரிவில் முதலிடத்தை திண்டுக்கல் கேஎஃப்சி அணியினரும் , இரண்டாம் இடத்தையும் மதுரை லேனா அணி பெற்றன. இதில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு ரூ.30,000 மற்றும் சுழற் கோப்பையும், இரண்டாம் பரிசு ரூ. 20000 மற்றும் சுழற் கோப்பையும், மூன்றாம் பரிசு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.
Next Story