உதகை நகர திமுக சார்பில் சுற்றுலா பயணிகளுடன் கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல்விழா...திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ ராசா பங்கேற்பு......

உதகை நகர திமுக சார்பில் சுற்றுலா பயணிகளுடன் கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல்விழா...திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ ராசா பங்கேற்பு......
உதகை நகர திமுக சார்பில் சுற்றுலா பயணிகளுடன் கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல்விழா...திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ ராசா பங்கேற்பு...... நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள நாடாளுமன்ற அலுவலகத்தில் நீலகிரி மாவட்ட திமுக சார்பில் மாவட்டச் செயலாளர் முபாரக் தலைமையில் இளைஞர் அணி அமைப்பாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் 200 மாற்றத்திறனாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் உட்பட நலத்திட்ட உதவிகளை கொண்டாடப்பட்ட நிலையில் உதகை நகர திமுக சார்பில் நகரச் செயலாளர் ஜார்ஜ் தலைமையில் திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா முன்னிலையில் நகரக் கழக அலுவலகத்தில் சுற்றுலா பயணிகளுடன் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து Forest gate பகுதியில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் கட்டப்பட்ட பேருந்து நிழற்குடை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்தவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உதகை நகரத்திற்குட்பட்ட 35 வார்டு பகுதியில் நகர மன்ற உறுப்பினர் ரமேஷ் ஏற்பாட்டில் சுமார் ஐந்து லட்ச ரூபாய் மதிப்பிலான ஆம்புலன்ஸ் சேவையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெயரில் பொதுமக்களின் அவசரத்தை வைக்காத ஆ.இராசா துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு கொறடா ராமச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், மாவட்ட அவைத் தலைவர் போஜன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இளங்கோ, செந்தில் ரங்கராஜன், கே எம் ராஜு.மாவட்ட பொருளாளர் நாசர் ,மாநில பொறியாளர் அணி அமைப்பாளர் பரமேஷ் குமார் உட்பட திமுகவினர் மற்றும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.
Next Story