நாமக்கல்லில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி! மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
Namakkal King 24x7 |13 Jan 2025 5:34 AM GMT
ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சீட் பெல்ட் அணிந்து வந்த கார் ஓட்டுநர்கள் ஆகியோருக்கு, நாமக்கல் நெடுஞ்சாலை துறை சார்பில், அவர்களை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. கோட்டப் பொறியாளர் திருகுணா இந்தப் பரிசுகளை வழங்கினார்.
தேசிய சாலை பாதுகாப்பு மாதம் ஜனவரி 2025-ஐ முன்னிட்டு, நாமக்கல்லில் நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி (13.01.2025) நடைபெற்றது. ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.இதில் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள்,பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.தேசிய சாலை பாதுகாப்பு மாதம் ஜனவரி 2025 ஐ முன்னிட்டு, அரசின் பல்வேறு துறைகள் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நெடுஞ்சாலைத்துறையின் நாமக்கல் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் சார்பில், நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அருகே, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி (13.01.2025) நடைபெற்றது.இதில், மாவட்ட ஆட்சியர் ச.உமா கலந்துகொண்டு,தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதி மொழியை வாசிக்க அனைவரும் உடன் வாசித்து அதனை ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து விழிப்புணர்வு ஊர்வலத்தை, மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து, தொடங்கி வைத்தார்.இந்தப் பேரணியானது, நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகில் இருந்து தொடங்கி, பரமத்தி சாலை, கோட்டை சாலை, உழவர் சந்தை, ஆஞ்சநேயர் கோவில், நேதாஜி சிலை, பலப்பட்டறை மாரியம்மன் கோவில், கடைவீதி, பிரதான சாலை, அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், மணிக்கூண்டு வழியாக வந்து, நாமக்கல் பூங்கா சாலையில் நிறைவு பெற்றது.இந்தப் பேரணி நடைபெற்றபோது, அவ்வழியாக ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சீட் பெல்ட் அணிந்து வந்த கார் ஓட்டுநர்கள் ஆகியோருக்கு, நாமக்கல் நெடுஞ்சாலை துறை சார்பில், அவர்களை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. கோட்டப் பொறியாளர் திருகுணா இந்தப் பரிசுகளை வழங்கினார்.இப்பேரணியில் கலந்துகொண்ட நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் 250-க்கும் மேற்பட்டோர், தலைக்கவசம் அணிதல், சீட் பெல்ட் அணிதல் உள்ளிட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த பதாகைகளை கையில் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.இந்த விழிப்புணர்வு பேரணியில்,நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) நாமக்கல் கோட்டப் பொறியாளர் திருகுணா, ரெட் கிராஸ் மாவட்ட செயலாளர் இராஜேஷ் கண்ணன், உதவி கோட்டப் பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், அலுவலகப் பணியாளர்கள், சாலைப் பணியாளர்கள் என 250-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
Next Story