அலங்காநல்லூரில் அமைச்சர் ஆய்வு
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நாளை மறுநாள் ஜனவரி 16ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியினை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்க இருக்கிறார்கள். இந்நிலையில் இதற்கான பணிகள் மற்றும் முன்னேற்பாடுகளை இன்று (ஜன.13) காலை வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் ஆகியோர் சென்று வாடிவாசல், பார்வையாளர் அமரும் பகுதி, கால்நடை மருத்துவமனை அமைந்திருக்கும் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களை ஆய்வு செய்தனர். உடன் வருவாய் துறை அதிகாரிகள் இருந்தனர்.
Next Story




