பாவை பவுண்டேஷன் சமத்துவ பொங்கல் விழா
பாவை பவுண்டேஷன் சார்பாக பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் செட்டிகுளம் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளர் மற்றும் கிராம செவிலியர்கள் , தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்,பணித்தள பொறுப்பாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் இந்த சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்டு மிகவும் சிறப்பாக சிறப்பித்தனர். இந்த சமத்துவ பொங்கலை முன் நின்று கிராமத்தின் மகளிர் குழு தலைவி.திருமதி கீதா முன்னின்று செயல்படுத்தினர். சமத்துவ பொங்கல் சிறப்பாகவும் அழகாகவும் முடிந்தது.இதில் கோலப்போட்டிகள் மகளிர்களுக்கும் மற்றும் மியூசிக்கல் சேர் மற்றும் பானை உடைதல் போட்டிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மற்றும் குழந்தைகளுக்கும் நடைபெற்றது. இந்த போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது மற்றும் பாவை அறக்கட்டளையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரியதர்ஷினி வழங்கினார். கிராம மக்கள் அனைவரும் பாவை அறக்கட்டளைக்கு நன்றியை தெரிவித்தனர்.
Next Story




