தர்மபுரி உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை ஜோர்
Dharmapuri King 24x7 |13 Jan 2025 7:02 AM GMT
பொங்கல் பண்டிகை முன்னிட்டு தர்மபுரி உழவர் சந்தையில் 30 டன் காய்கறிகள் விற்பனை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தரூமபுரி உழவர் சந்தையில் இன்று காய்கறிகள் படு ஜோராக விற்பனையானது. அதிகாலை முதலே காய்கறிகள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.பொங்கல் பண்டிகைக்கு தேவையான செங்கரும்பு, மஞ்சள் குலை, சர்க்கரை பூசணி, வாழை இலை, தேங்காய்,வாழைப் பழம் ஆகியவை வாங்க பொதுமக்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். வழக்கமாக தினமும் 5 ஆயிரம் பொதுமக்கள், 100 விவசாயிகள் தருமபுரி உழவர் சந்தைக்கு வருவார்கள். சுமார் 30 டன் காய்கறிகள் விற்பனையாகும். இவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். இன்று ஒரே நாளில் மட்டும் 51 டன் காய்கறிகள் விற்பனையானது. இவற்றின் மதிப்பு ரூ.24 லட்சம் ஆகும். 148 விவசாயிகளும், பொதுமக்கள் 10 ஆயிரத்து 200 பேரும் இன்று வந்தனர்.பொங்கல் பண்டிகைக்கு முக்கிய தேவையான மொச்சை, அவரை மூன்றரை டன் விறுவிறுப்பாக விற்பனையானது. இந்த மொச்சை அவரை நேற்று ஒரு கிலோ ரூ.104-க்கும் இன்று ரூ95 க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோன்று செங்கரும்பு ஒரு ஜோடி ரூ.100 வரையிலும், மஞ்சள் கொம்பு ஒரு ஜோடி ரூ.60 , வரையிலும் விற்பனையானது. வாழைப் பழம் ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.88 வரை விற்பனையானது.
Next Story