காரப்பேட்டை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
Thoothukudi King 24x7 |13 Jan 2025 7:09 AM GMT
தூத்துக்குடி காரப்பேட்டை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
தூத்துக்குடி காரப்பேட்டை பள்ளியில் 2008 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்தித்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தூத்துக்குடி காரப்பேட்டை பள்ளியில் 2008 ஆம் ஆண்டு பயின்ற மாணவர்கள் சுமார் 50 மாணவர்கள் குடும்பத்தோடு பள்ளிக்கு வருகை தந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்களையும், இந்நாள் ஆசிரியர்களையும் கெளரவித்தனர். மாணவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஜெர்மனி, மலேசியா, சிங்கப்பூரிலிருந்தும் வருகைதந்து தங்களுடைய பள்ளி அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். பள்ளி நூலகத்திற்கு200 புத்தகங்கள்வழங்கினார்கள். மேலும் சத்துணவு உண்ணும் மாணவர்களுக்கு அமர்ந்து உண்ண 20 சில்வர் மேசை மற்றும் பெஞ்ச்வாங்கித் தருவதாக உறுதியளித்தனர். ஆசிரியர்களுக்கு மதிய உணவு நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர். தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இதுபோல சந்திப்பு நிகழ்வு நடத்த வேண்டும் என்று உறுதி ஏற்றுக் கொண்டனர்.
Next Story