மல்லிகா அர்ஜுனேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்
Dharmapuri King 24x7 |13 Jan 2025 7:11 AM GMT
கோட்டை அருள்மிகு மல்லிகார்ஜனேஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் இன்று ஆருத்ரா சிறப்பு தரிசனம்
.தர்மபுரி ஸ்ரீ காமாட்சி அம்பிகை உடனாகிய ஸ்ரீ மல்லிகார்ஜுனேஸ்வர திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் இன்று அதிகாலை நாலு மணி அளவில் ஸ்ரீ சிவகாமி அம்பையே உடனகிய நடராஜ மூர்த்திக்கு 12 வகையான பொருட்களைக் கொண்டு பால் தயிர் இளநீர் பன்னீர் தேன் பஞ்சாமிர்தம் மஞ்சள் குங்குமம் சந்தனம் விபூதி போன்ற பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நடராஜர் மூர்த்திக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாரணைகள் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர் நடராஜன் மூர்த்திக்கு படைக்கப்பட்ட பக்தர்களுக்கு அனைவருக்கும் காலை பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கோவில் அர்ச்சகர் சிறப்பு பூஜை வழிபாடு செய்தனர் அறங்காவலர் குழு இணை ஆணையர் சபர்மதி பதிவு ஆய்வாளர் மகாவிஷ்ணு ஆய்வாளர் மாதேஷ் செயலாளர் ராஜகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்
Next Story