தூத்துக்குடி சிவன் கோவிலில் ஆருத்ரா தரிசனம்!
Thoothukudi King 24x7 |13 Jan 2025 7:13 AM GMT
தூத்துக்குடி சிவன் கோவிலில் திருவாதிரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆனந்த ஆருத்ரா தரிசனம் இன்று காலை நடைபெற்றது
தூத்துக்குடி சிவன் கோவிலில் திருவாதிரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆனந்த ஆருத்ரா தரிசனம் இன்று காலை நடைபெற்றது. தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என அழைக்கப்படும் பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு சிவனுக்கு திருவெம்பாவை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருவாதிரை திருவிழா ஜன.4ஆம் தேதி தொடங்கியது. இவ்விழாவில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று (13ஆம் தேதி) ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதையொட்டி அன்று அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 2.30 மணிக்கு திருவனந்தல், 3 மணிக்கு அபிஷேகம், 4 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 5 மணிக்கு காலசந்திபூஜைகள் நடைபெற்றது. பின்னர் காலை 6 மணிக்கு ஸ்ரீஆடவல்லான் ஆனந்த ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story