கல்குவாரிக்கு அனுமதி அளிக்க கூடாது : கிராம மக்கள் கோரிக்கை!
Thoothukudi King 24x7 |13 Jan 2025 7:19 AM GMT
விவசாய நிலம் அருகே கல்குவாரிக்கு அனுமதி அளிக்க கூடாது : கிராம மக்கள் கோரிக்கை!
சேரகுளம் பகுதியில் விவசாய நிலங்களுக்கு அருகே கல்குவாரி மற்றும் கிரஷர் தொழில் செய்ய அனுமதி அளிக்க கூடாது என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக கிராம மக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "சேரகுளம் பகுதியில் தென்னை, நெல் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து வருகின்றோம். அதில் ஊடுபயிராக கடலை, உளுந்து விவசாயம்செய்து வருகின்றோம். எங்களது வாழ்வாதாதரம் முழுவதும் விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ளது. இந்நிலையில் சேரகுளம் பகுதியில் கல்குவாரி மற்றும் கிரஷர் தொழில் செய்ய சிலர் விண்ணப்பித்துள்ளார்கள். மேலும் சர்வே நம்பரின் மிக அருகாமையில் மகிழ்ச்சிபுரம் என்னும் கிராமத்தில் 200 வீடுகள் உள்ளன. இதேப்போல் பருத்திப்பாடு என்ற கிராமத்தில் 300 குடும்பங்கள் உள்ளது. இந்த 2 கிராமத்தில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் விவசாயம் போன்றவை இங்குள்ள நிலத்தடி நீரை நம்பியே உள்ளது. இவ்வாறு கிரஷ்ஷர். கல் குவாரி ஆகியவை அருகில் வரும் பட்சத்தில் இந்த பகுதியில் உள்ள நிலத்தடி நீர் மட்டம் குறைவதுடன், காற்றில் தூசி மாசு ஏற்பட்டு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும். இதே போன்ற நிகழ்வுகள் நமது மாவட்டத்தில் பல பகுதியில் ஏற்பட்ட உதாரணங்கள் உள்ளது. எனவே சேரகுளம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் கல்குவாரி, கிரஷ்ஷர் தொழில் அனுமதிக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story