ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்.

ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்.
மதுரை ஆட்சியர் அலுவலகம் எதிரே விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இன்று (ஜன.13) காலை மதுரை கிழக்கு தாலூகா தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பாக மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் நரசிங்கம் ஊராட்சியை மதுரை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டாம் என்றும் ,விவசாயக் கூலித் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்க வேண்டாம், மாற்றுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லாத ஊராட்சிகளை மாநகராட்சியாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
Next Story