போக்குவரத்து பாதிப்பு
Erode King 24x7 |13 Jan 2025 9:17 AM GMT
திம்பம் மலைப்பகுதியில் இன்று போக்குவரத்து நெரிசல் நீண்ட கிலோமீட்டர் தூரம் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. தமிழகம், கர்நாடகாவை இணைக்கும் மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக திம்பம் மலைப்பகுதி இருந்து வருகிறது. இங்கு நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக சரக்கு போக்குவரத்து லாரிகள் அதிகளவில் கர்நாடகாவில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன. ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவுகளையும் திரும்பி செல்வது வாகன ஓட்டிகளுக்கு சவால் ஆனதாகவும் . சமீப காலமாக அதிக பாரம் ஏற்றி சொல்லும் லாரிகள் கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது பழுதாகி நின்று விடுவதால் திம்பம் மலைப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட இரண்டு மணி முதல் மூன்று மணி நேரம் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இன்று விடுமுறை நாள் என்பதால் காலை 6 மணி முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களில் திம்பம் மலைப்பகுதிக்கு சென்ற வண்ணம் இருந்தனர். ஒரே நேரத்தில் வாகனங்கள் சென்றதால் திம்பம் மலைப்பகுதியில் இன்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வானங்கள் எங்கும் செல்ல முடியாமல் கிட்டத்தட்ட 2 கிலோ மீட்டர் தூரம் சாலையின் இரு புறம் அணிவகுத்து நின்றன. இதனால் தமிழகம் - கர்நாடகா இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் இரண்டு மணி நேரம் கழித்து மெது மெதுவாக போகிறது சீரானது. இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறும்போது, திம்பம் மலைப்பகுதியில் அதிக மரங்களை ஏற்றி லாரிகள் சென்று வருகின்றன. விதிமுறைகளை மதிக்காமல் அதிக பாரங்களை ஏற்று செல்லும் லாரிகள் ஆங்காங்கே சாலையில் பழுதாகி நிற்பதால் தொடர்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே இதனை வனத்துறையினர் போலீசார் கண்காணித்து அதிக பாரம் என்று செல்லும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்றனர்.
Next Story