பிரபல கொள்ளையன் கைது
Dindigul King 24x7 |13 Jan 2025 9:44 AM GMT
திண்டுக்கல்லில் மின்வாரிய அதிகாரி வீட்டின் பூட்டை பட்டப்பகலில் உடைத்து ரூ.1 லட்சம் கொள்ளை அடித்த பிரபல கொள்ளையன் கைது
திண்டுக்கல், R.M.காலனியில் மின்வாரிய அதிகாரி ஹரிபிரசாத்(31) என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் பணம் கொள்ளையடித்து சென்றது தொடர்பாக திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து மாவட்ட எஸ்பி பிரதீப் உத்தரவின்படி ASP.சிபின் மேற்பார்வையில் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் மலைச்சாமி, வாசு நகர் குற்றத்தடுப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் காவலர்கள் ராதா, முகமதுஅலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சிசிடிவி காவலர்கள் ஜான் மற்றும் செல்வி ஆகியோர் உதவியுடன் பல்வேறு சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் பிரபாகரன்(42) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் இவர் மீது கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story