பொங்கல் வைக்க மண்பானைகள் விற்பனை மும்மரம்

பொங்கல் வைக்க மண்பானைகள் விற்பனை மும்மரம்
X
சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டியில் பொங்கல் பண்டிகைக்காக மண்பானைகளை விற்பனைக்காக குவித்து வைத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி சிவன்கோயில் அருகே இளையாத்தங்குடியைச் சோ்ந்த 3 குடும்பத்தினா் பொங்கல் வைக்கப் பயன்படும் பானைகள் விற்பனையைத் தொடங்கியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக நகா்ப் புறங்களில் குடியேறியவா்கள் பாத்திரங்களில் பொங்கல் வைத்து வழிபட்டனா். தற்போது, மீண்டும் அவா்கள் மண்பானைகளில் பொங்கல் வைக்கத் தொடங்கினா். இதன் காரணமாக, கீழச்சிவல்பட்டி மட்டுமன்றி சுற்றுப்புற கிராமங்களில் மண்பானை விற்பனை களைகட்டின. இதுகுறித்து மண்பானை விற்பனையாளர்கள் கூறும்போது இளையாத்தங்குடியில் நாங்கள் பாரம்பரியமாக பானைகள் செய்து வருகிறோம். தற்போது, மண் தட்டுப்பாடு, தொழிலாளா்கள் பற்றாக்குறையால் தடங்கல் ஏற்பட்டாலும், அழகா்கோயில் பகுதியில் மண் வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். பொங்கல் பானை, கலயம், அடுப்பு ஆகியவை அதிகமாக விற்பனையாவதாக தெரிவித்தனர்
Next Story