அரசு அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்து கொண்டு, முதலாம் இடத்தை பிடித்து வெற்றி பெற்றார்.

அரசு அலுவலர்கள் பங்குபெற்ற சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் நடத்தப்பட்ட ரங்கோலி கோலப்போட்டி, இசை நாற்காலி, கயிறு இழுத்தல், தண்ணீர் நிரப்புதல், உரி அடித்தல். ஊசி நூல் கோர்த்தல் போன்ற தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் அரசு அலுவலர்களுக்கான சமத்துவ பொங்கல் விழா போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலையில் தொடங்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் இன்று (13.01.2025) நடைபெற்றது. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையிலும், அரசு அலுவலர்கள் பங்குபெற்ற சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் நடத்தப்பட்ட ரங்கோலி கோலப்போட்டி, இசை நாற்காலி, கயிறு இழுத்தல், தண்ணீர் நிரப்புதல், உரி அடித்தல். ஊசி நூல் கோர்த்தல் போன்ற தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் அரசு அலுவலர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இப்போட்டிகளில் ஒன்றான லெமன் ஸ்பூன் கொண்டு செல்லுதல் போட்டியில் அரசு அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்து கொண்டு, முதலாம் இடத்தை பிடித்து வெற்றி பெற்றார். பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் பரிசுகளை வழங்கினார்கள். முன்னதாக அனைத்துத்துறை அலுவலர்கள் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் முன்னிலையில் பொங்கல் வைத்து வழிபட்டனர். நிறைவாக காளை மாடுகள் பூட்டிய வண்டியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பயணம் செய்தனர். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ச.வைத்தியநாதன், சுற்றுலா அலுவலர் கா.நெல்சன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பொற்கொடி வாசுதேவன், உதவி சுற்றுலா அலுவலர் தாமரைச்செல்வி, உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story