பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு டீசல் கேனுடன் வந்த மூதாட்டி.

பெரம்பலூர் அருகே பேரளி கிராமத்தைச்சேர்ந்த சின்னம்மாள் என்பவர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். அப்போது அவரது கட்ட பையை சோதனை செய்த போலீசார் பையில் இருந்த 2 லிட்டர் டீசல்கேனை பறிமுதல் செய்தனர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு டீசல் கேனுடன் வந்த மூதாட்டி. பெரம்பலூர் அருகே பேரளி கிராமத்தைச்சேர்ந்த சின்னம்மாள் என்பவர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். அப்போது அவரது கட்ட பையை சோதனை செய்த போலீசார் பையில் இருந்த 2 லிட்டர் டீசல்கேனை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அவரிடம் கேட்ட பொழுது தங்களது உறவினர்கள் சொத்துக்காக என்னை ஏமாற்றி வருகின்றனர், எனவே தனக்கான சொத்துக்களை மீட்டு தர வேண்டும், அப்படி இல்லை என்றால் சாவது தவிர வேறு வழி இல்லை என தெரிவித்தார். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது கோரிக்கை மனுவை அளித்து சென்றார்.
Next Story