சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
X
பள்ளிபாளையம் நான்கு ரோடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியாரை அவதூறாக பேசி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க நினைக்கிறார். தந்தை பெரியார் தமிழ் சமூகத்துக்கு பெரும் பங்கு ஆற்றியுள்ள நிலையில் அவரை இழிவுபடுத்தும் வகையில் தொடர்ச்சியாக சீமான் பேசி வருகிறார். எனவே அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, பள்ளிபாளையம் நான்கு ரோடு பகுதியில் திங்களன்று  மதிமுக, திராவிட கழகம், சிபிஎம் ,புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை  நடத்தினர் . இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மதிமுக நகரச் செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார் . மேலும் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கி ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன், மதிமுக மாவட்ட செயலாளர் கணேசன், மற்றும் பெரியார் இயக்கங்களை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்..
Next Story