பேராவூரணி பேரூராட்சி சார்பில் புகையில்லா போகி விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் வழங்கல்

பேராவூரணி பேரூராட்சி சார்பில் புகையில்லா போகி விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் வழங்கல்
விழிப்புணர்வு
தஞ்சாவூர் மாவட்டம்,  பேராவூரணி தேர்வுநிலை பேரூராட்சி சார்பில், பேரூராட்சி பகுதி பொதுமக்களுக்கு புகையில்லா போகி விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.  விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா தலைமையில், துப்புரவு  ஆய்வாளர் செந்தில் குமரகுரு, சுகாதார மேற்பார்வையாளர் வீரமணி மற்றும் துப்புரவு பணியாளர்கள் பழைய, புதிய பேருந்து நிலையம், கடைவீதி, அனைத்து வார்டு பகுதிகளிலும் வழங்கினர்.  விழிப்புணர்வு பிரசுரத்தில் தேவையற்ற பொருட்களை தீயிட்டு எரிப்பதால் புவி வெப்பமடைவதுடன் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. வீடுகள், கடைகளில் உள்ள பழைய டயர்கள், துணிகள், பிளாஸ்டிக் பொருட்கள், பழுதடைந்த மின்சாதனப் பொருட்கள், பாய்கள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை தீயிட்டு  எரிப்பதை தவிர்க்க வேண்டும். தேவையற்ற பொருட்களை  பேரூராட்சி தூய்மை பணியாளர்களிடமோ, நடமாடும் சிறப்பு கழிவுகள் சேகரிக்கும் வாகனங்களிலோ ஒப்படைக்க வேண்டும்.  பயன்படுத்தக் கூடிய பழைய துணிகள் உள்ளிட்ட பிறருக்கு பயன்படும் பொருட்களை தீயிட்டு எரிக்காமல், அப்பொருட்கள் கிடைக்க வழியின்றி வாழ்பவர்களுக்கு வழங்க வேண்டும். கழிவுகள் உற்பத்தி செய்யப்படுவதில்லை, உருவாக்கப்படுபவையே" என குறிப்பிடப்பட்டிருந்தது . .
Next Story