சட்ட விரோத மதுபாட்டில்கள் விற்பனை, இருவர் கைது
Thanjavur King 24x7 |13 Jan 2025 4:15 PM GMT
கிரைம்
பந்தநல்லூா் அருகே புதுச்சேரி மதுபாட்டில்களை சட்டவிரோத விற்பனைக்கு வைத்திருந்த இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், பந்தநல்லூா் அருகே கருப்பூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் கருப்பூா் மேலத்தெருவில் சோதனை செய்த போலீஸாா், புதுச்சேரி மாநிலம் காரைக்காலிலிருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்து வந்த அக்காள், தம்பியாகிய அனுசியா (32), அசோதமன் (27) ஆகிய இருவரையும் கைது செய்துனா். அவா்களிடமிருந்து 1,300 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.
Next Story