சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா தொடங்கி வைத்தார் முதல்வர்
Chennai King 24x7 |13 Jan 2025 4:56 PM GMT
சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை - கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத் திடலில், தமிழ் மண்ணின் கலைகளை களிப்போடு கொண்டாடும் வகையில் சென்னை மாநகரில் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளுடன் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் நடத்தப்படும் ‘சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’-வை முதல்வர் ஸ்டாலின் முழவு இசைத்து தொடங்கி வைத்தார். தமிழகத்தின் புகழ்பெற்ற 250 கலைஞர்கள் இணைந்து நடத்திய மாபெரும் இசை, நடன நிகழ்ச்சிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். தொடர்ந்து இந்த விழாவில் பங்கேற்ற கலைஞர்களுடன் குழு புகைப்படமும் முதல்வர் ஸ்டாலின் எடுத்துக் கொண்டார். சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’ கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்படுகிறது. சென்னையில் இன்று தொடங்கியுள்ள இத்திருவிழா, 18 இடங்களில் 14 முதல் 17-ம் தேதி வரை 4 நாட்கள் மாலை 6.00 முதல் இரவு 9.00 மணி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி உணவுத் திருவிழாவும் நடைபெறுகிறது. பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு, சுற்றுலா துறை சார்பில் பொங்கல் சுற்றுலாவும் நடத்தப்படுகிறது.
Next Story