பொதுமக்கள் வீடுகளில் முன்பு பொங்கல் வைத்து சூரியனை வழிபாடு

தூத்துக்குடியில் பொதுமக்கள் வீடுகளில் முன்பு பொங்கல் வைத்து சூரியனை வழிபாடு செய்தனர்.
தூத்துக்குடி; தமிழர் திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு தூத்துக்குடியில் பொதுமக்கள் தங்களின் வீடுகளில் முன்பு பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டனர் தமிழர் திருநாளான தை 1ஆம் தேதி தைப்பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது இதையொட்டி தூத்துக்குடியில் உள்ள பொதுமக்கள் தங்களின் வீடுகளுக்கு முன்பாக கோலம் போட்டு அதன்மேல் அடுப்பு வைத்து புதுப்பானையில் புத்தரிசி போட்டு பொங்கல் வைத்தனர். தூத்துக்குடி காமாட்சி அம்மன் கோவில் தெருவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் முன்பாக பொங்கல் பானையை வைத்து ஒருசேர பொங்கலிட்டனர் பானையில் பால் பொங்கி வரும்போது பொதுமக்கள் பொங்கலோ பொங்கல் என தெரிவித்து சூரியனை வழிபட்டு தைப்பொங்கலை வரவேற்றனர் மேலும் இந்த ஆண்டு எந்த விதமான இயற்கை சீற்றங்கள் இன்றி அனைத்து தரப்பு மக்களும் நலமாக வாழ வேண்டுமென பிரார்த்தனையும் செய்தனர்.
Next Story