ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு
Dharmapuri King 24x7 |14 Jan 2025 2:03 AM GMT
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 1200 கன அடியாக நீர்வரத்து சரிவு
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சமீப நாட்களாக தமிழக கர்நாடக எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள காவிரிநீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால் ஆற்றில் நீர்வரத்து சரிந்து காணப்படும் நிலையில் கடந்த வாரம் வினாடிக்கு 1500 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று ஜனவரி 14, காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 1200 கன அடியாக நீர்வரத்து வந்து கொண்டுள்ளது. மேலும் தமிழக கர்நாடக எல்லை பகுதியான வெளி குண்டளுவில் அதிகாரிகள் தொடர்ந்து நீரின் அளவை அதிகாரிகள் கணக்கீடு செய்து வருகின்றனர்.
Next Story