எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளும் பொங்கல் விழாவில் அ.தி.மு.க.வினர் திரளாக பங்கேற்க வேண்டும்
Salem King 24x7 |14 Jan 2025 2:12 AM GMT
ராஜமுத்து எம்.எல்.ஏ. அறிக்கை
சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதி எம்.எல்.ஏ. ராஜமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகம் முழுவதும் பொங்கல் விழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. அ.தி.மு.க. சார்பில் சேலம் புறநகர் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புத்தூர் ஊராட்சியில் பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. விழாவில் கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு தலைமை தாங்கி சிறப்பிக்க உள்ளார். புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் முன்னிலை வகிக்கிறார். விழாவில் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் மற்றும் கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story