பேரூராட்சி அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா

பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் மன்ற தலைவர் செங்கல் மாரி தலைமையில் செயல் அலுவலர் ரவிக்குமார் முன்னிலையில் நேற்று மாலை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. அப்போது பேரூராட்சி அலுவலகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தனர் அதனைத் தொடர்ந்து அலுவலக பணியாளர்கள், வார்டு கவுன்சிலர்கள், தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு இனிப்புப் பொங்கல் வைத்து பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறி இனிப்புகளை வழங்கி தமிழர் திருநாளை கொண்டாடினர். இதில் பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்
Next Story