கோவை: கபடி வீரர் மாரடைப்பால் திடீர் மரணம் !
Coimbatore King 24x7 |14 Jan 2025 2:38 AM GMT
குனியமுத்தூரில் மாவட்ட அளவிலான கபடி போட்டியில் பங்கேற்க வந்த வீரர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை, குனியமுத்தூரில் மாவட்ட அளவிலான கபடி போட்டியில் பங்கேற்க வந்த வீரர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த கபடி அணி, கோவைபுதூரில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க நேற்று காலையில் வந்து இருந்தது. போட்டி மாலையில் துவங்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்து இருந்தனர். இதை அடுத்து, அந்த அணியைச் சேர்ந்த மணிகண்டன் (23) உள்ளிட்டோர், ஆர்.டி.ஓ. சாலையில் உள்ள ரவுண்டானாவில் அமர்ந்து இருந்தனர். அப்பொழுது திடீரென மணிகண்டன் சரிந்து விழுந்தார். உடனடியாக அவரை சுண்டக்காமுத்தூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த மணிகண்டன், தனது கண்களை தானமாக அளித்து இருந்தார். இதை அடுத்து, அவரது கருவிழிகள் அரசு மருத்துவமனையில் எடுத்துச் செல்லப்பட்டன. பிரேத பரிசோதனைக்குப் பின், அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story