கலை கட்டிய பொங்கல் விற்பனை மொத்த
பெரம்பலூரில் பொங்கல் பண்டிகையைமுன்னிட்டுநேற்றுககும்பு மஞ்சள் மற்றும் பூஜை பொருட்களின் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. இதனால் பழைய பேருந்து நிலையம் பகுதி பொதுமக்கள் கூட்டத்துடன் காணப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட தயாராகி வருகின்றனர். அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை வழக்கமான உற்ச சுத்துடன் கொண்டாடப்பட உளது. பொங்கல் பண்டிகையில் ப ான பங்கு வகிக்கும் மஞ்சள்,கரும்பு, வாழத்தார் மற்றும் பூஜை பொருட்களின் இறுதிகட்ட விற்பனை நேற்று களைகட்டியது. அதே போல் மாட்டுப் பொங்கலுக்கு தேவையான வண்ணப்பொடிகள், மூக்கணாங்கயிறு போன்றவற்றையும் விவசாய பெருங்குடி மக்கள் வாங்கி சென்றனர். அதேபோல் புத்தாடைகள் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டியதால் ஜவுளிக்கடைகள் கூட்டமாக காணப்பட்டது. குறிப்பாக பெரம்பலூர் பழைய பேருந்துநிலையம், கடை வீதி பகுதிகளில் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் பொருட்கள் வாங்க குவிந்தனர். இதனால் பொங்கல் பொருட்களின் இறுதிகட்ட விற்பனை ஜரூராக நடைபெற்றது.
Next Story



