தொழிலாளர் நலத்துறை அலுவலகம் திறப்பு விழா

X
விழுப்புரம், வி.மருதுாரில் தொழிலாளர் நலத்துறை சார்பில் ரூ.3.72 கோடி மதிப்பீட்டில் புதிதாக ஒருங்கிணைந்த தொழிலாளர் நலத்துறை அலுவலக கட்டடம் திறப்பு விழா நடந்தது.தமிழக முதல்வர் ஸ்டாலின், தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் இந்த கட்டடத்தை திறந்து வைத்தார். அதனையொட்டி கலெக்டர் பழனி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.இந்த அலுவலகம் 965.40 ச.மீ., பரப்பளவில் தரைதளம், முதல் தளங்களாக அமைக்கப்பட்டுள்ளது. உதவி ஆணையர் (அமலாக்கம்), தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலங்கள் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது.விழாவில் சேர்மன் தமிழ்செல்வி பிரபு, தொழிலாளர் நலத்துறை இணை இயக்குநர் புனிதவதி, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பரிதி, உதவி ஆணையர் (அமலாக்கம்) மீனாட்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story

