அல்லாள இளைய நாயக்கர் பிறந்த நாளை முன்னிட்டு ஜேடர்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மாமன்னர் அல்லாள இளைய நாயக்கருக்கு ஜேடர்பாளையம் படுகை அணை பகுதியில் ரூ.21.80 இலட்சம் மதிப்பீட்டில் குவிமாடத்துடன் (Dome) திருவுருவச் சிலை அமைக்கப்பட்டு, கடந்த 28.1.2023 அன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், மாநில இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அணைக்கட்டு பகுதியில் அல்லாள இளைய நாயக்கரின் பிறந்தநாள் அரசு விழாவை முன்னிட்டு, அவரது திருவுருவ சிலைக்கு, மாவட்ட ஆட்சியர் ச. உமா,மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இராஜேஸ் கண்ணன்,திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் எம்எல்ஏ, மக்கள் பிரதிநிதிகள், பல்வேறு அமைப்பினர்,மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் நாமக்கல் மாவட்டத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே ஜேடர்பாளையம் பகுதியில் படுகை அணை அமைத்து, கால்வாய் பாசனத்திற்கு வழிவகை செய்தவர் அப்பகுதியை ஆட்சி செய்த மாமன்னர் அல்லாள இளைய நாயக்கர் ஆவார்
. இத்தகைய சிறப்புமிக்க ஆட்சி செய்த மாமன்னர் அல்லாள இளைய நாயக்கரின் பிறந்தநாள் விழாவை சிறப்பிக்கும் வகையில், அவரின் பிறந்தநாள் ஆன தை முதல் நாள், ஜேடர்பாளையம் படுகை அணை பகுதியில், அவரின் திருவுருவ சிலையுடன் கூடிய குவிமாடத்தில், இந்த ஆண்டு முதல், தை 1-ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தது. இதன்படி, தமிழ்நாடு அரசின் செய்தி-மக்கள் தொடர்பு துறை சார்பில், அவரது பிறந்த நாள் தை முதல் நாளான இன்று (14.01.2025), நாமக்கல் மாவட்டம், பரமத்தி-வேலூர் வட்டம், ஜேடர்பாளையம் படுகை அணைப் பகுதியில் உள்ள குவிமாடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், மாமன்னர் அல்லாள இளைய நாயக்கரின் திருவுருவ சிலைக்கு, மாநில அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர் ஆட்சித் உமா மாலை அணிவித்தும் மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினார். அவருடன், இந்நிகழ்ச்சியில் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சே.சுகந்தி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தே.ராம்குமார், பரமத்தி வட்டாட்சியர் பி.முத்துக்குமார், கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கு.இராஜேந்திரபிரசாத், மலர்விழி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.
அல்லாள இளைய நாயக்கரின் பரம்பரையைச் சேர்ந்த சோமசுந்தரம் பட்டக்காரர், அரைய நாடு அல்லாள இளைய நாயக்கர் அறக்கட்டளை நிர்வாகிகள், கபிலர்மலை கொங்கு நாடு வேட்டுவ கவுண்டர் மடத்தை பல்வேறு சமூக அமைப்பினர உள்ளிட்டோர் வருகை தந்து, அல்லாள இளைய நாயக்கரின் திருவுருவசிலைக்கு மாலை அணிவித்தும் மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினர். நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்தில் காவேரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்து சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயன் பெற, ராஜ வாய்க்கால் ஏற்படுத்தியவர் அல்லாள இளைய நாயக்கர். இன்றளவும் அப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாகவே திகழ்கின்ற அக்கால்வாயை அமைத்த அவரை பெருமைப்படுத்தும் வகையில், *அப்பகுதி மக்களின் கோரிக்கையினை ஏற்று மாமன்னர் அல்லாள இளைய நாயக்கருக்கு ஜேடர்பாளையம் படுகை அணை பகுதியில் ரூ.21.80 இலட்சம் மதிப்பீட்டில் குவிமாடத்துடன் (Dome) திருவுருவச் சிலை அமைக்கப்பட்டு, கடந்த 28.1.2023 அன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், மாநில இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆகும். இந்த நிகழ்வில் மக்கள் பிரதிநிதிகள், அரசு துறை அலுவலர்கள், முன்னாள்/இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.
Next Story