காரில் சென்று விபத்தை ஏற்படுத்திய இளைஞருக்கு அடி

காரில் சென்று விபத்தை ஏற்படுத்திய இளைஞருக்கு அடி
X
வேடசந்தூரில் காரில் சென்று விபத்தை ஏற்படுத்தி விட்டு திமிராக பேசிய இளைஞருக்கு அடி - விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அய்யனார் நகரைச் சேர்ந்த தண்டபானி என்பவர் வேடசந்தூர் ஆத்துமேடு மார்க்கெட் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ராமச்சந்திரன் என்ற இளைஞர் பழனியில் இருந்து திருச்சி நோக்கி ஒரு காரில் சென்றார். அதிவேகமாக சென்ற கார் முன்னால் சென்ற தண்டபானியின் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் தண்டபானி இரண்டு கார்களுக்கு இடையே சிக்கிக்கொண்டார். அவரது இரு சக்கர வாகனம் நொறுங்கியது. அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டனர். அப்போது வானத்தை ஒட்டி வந்த ராமச்சந்திரனை அங்கிருந்த பொதுமக்கள் தட்டிக்கேட்டபோது, காரில் இருந்த மற்றொரு இளைஞர் கெத்தாக காரைவிட்டு இறங்கி வந்து தெனாவட்டாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்தனர். அந்த இளைஞர் அடி தாங்க முடியாமல் கையெடுத்து கும்பிட்டு மன்னித்துவிடுங்கள் என்று கெஞ்சியபடி நின்றார். அதனைத்தொடர்ந்து பொதுமக்கள் தண்டபானியை மீட்டு தனியார் வாகனத்தின் மூலம் வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story