புற்றுநோய் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி எம்எல்ஏ பங்கேற்பு

X
கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் லாடம் என்ற தனியார் அமைப்பு சார்பில் கடற்கரை மக்களிடையே புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பிரம்மாண்ட சைக்கிள் பேரணி நேற்று நடைபெற்றது. கிளியூர் தொகுதிக்குட்பட்ட மார்த்தாண்டன் துறை, வள்ளவிைைளை, ததேயுபுரம், இடப்பாடு, ரவிபுத்தன் துறை வழியாக சின்னத்துறை மீனவ கிராமத்தில் இந்த சைக்கிள் பேரணி முடிவடைந்தது. இந்த பேரணியில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் கலந்துகொண்டு சைக்கிளை ஓட்டி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் ஏராளமான மாணவ மாணவிகள் மற்றும் பெரியோர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். தொடர்ந்து சின்னத்துறை சந்திப்பு பகுதியில் இயற்கை உணவு வகைகளின் கண்காட்சியும், இயற்கை சார்ந்த கைவினைப் பொருள்களின் கண்காட்சியும் நடைபெற்றது.
Next Story

